Advertisment

மாவீரன் படத்துக்கு சிக்கல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

maaveeran issue

Advertisment

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் 'மகாவீருடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு எதிராக ஐ.ஜே.கே கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும். மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என்ற பொறுப்புத்துறப்பு திரையரங்குகளில் வெளியிட வேண்டும். கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

actor sivakarthikeyan Maaveeran movie MADRAS HIGH COURT
இதையும் படியுங்கள்
Subscribe