Skip to main content

ஒரே டயலாக்...இரண்டு படத்தில்...நடந்தது என்ன..?

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
maari2

 

 

 

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான 'மாரி 2' படமும், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் 'கே.ஜி.எப்' படமும் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரண்டு படத்திலும் ஒரே  வசனம் இடம்பெற்றுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. (if you are bad, i am your dad) 'இஃப் யு ஆர் பேட், அயம் யுவர் டாட்' என்ற இந்த வசன வரிகள் இந்த இரண்டு படங்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவை எப்படி இரண்டு படங்களிலும் இடம்பெற்றது என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. அதுவும் இவை இரண்டும் ஒரே நாளில் ரிலீசானதால் கன்னடத்தை பார்த்து தமிழில் காப்பி அடிக்கப்பட்டதா...? அல்லது தமிழை பார்த்து கன்னடத்தில் காப்பி அடிக்கப்பட்டதா...? என்ற குழப்பமும் நிலவி வருகிறது. உண்மையில் இந்த வசனம் பல ஆண்டுகளாக டி ஷர்ட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்‌ஷன்... பில்டப்... நட்பு - வெளியான சலார் ட்ரைலர்

Published on 01/12/2023 | Edited on 02/12/2023

 

prbhas salaar trailer released

 

கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

 

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜுலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது.

 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன.  மேலும் நட்பிற்கு முக்கியதுவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தில் இடம்பெற்றது போல் ஹீரோவிற்கான பில்டப் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. படத்திற்கான புக்கிங் வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

Next Story

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் திடுக்கிடும் தகவல்!

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Shocking information on Thiruvannamalai ATM robbery

 

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 8 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  

 

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்பில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும், திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.