style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
'மாரி' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'மாரி 2'. 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் 'ரௌடி பேபி' சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி 'மாரி 2' படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது எனவும், படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் என தனுஷ் அறிவித்துள்ளார். இப்படத்தில் சாய்பல்லவி,டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோசங்கர், வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.