
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் வில்லன் டோவினோ தாமசுடன் தனுஷ் மோதுவதுபோல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கபட்டபோது யாரும் எதிர்பாராத விதமாக தனுஷின் வலது காலிலும், இடது கையிலும் பலமாக அடிபட்டு பின்னர் அதற்காக சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இந்த சண்டைக்காட்சியுடன் 'மாரி 2' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.