Advertisment

நடிகைகளுடன் இணைந்து சுஹாசினி மணிரத்னம் எடுத்த முயற்சி!

Suhasini ManiRatnam

தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் நோக்கோடு, நடிகை சுஹாசினி மணிரத்னம் 'மார்கழித் திங்கள்' என்ற நகர்வை முன்னெடுத்துள்ளார். இதில், தொழில் ரீதியான பாடகர்கள் அல்லாத 9 நடிகைகள் இணைந்து ஆண்டாளின் 'திருப்பாவை' முதல் பாசுரத்தைப் பாடியுள்ளனர்.

Advertisment

இதுபற்றி சுஹாசினி மணிரத்னம் கூறும்போது, "உமா பத்மனாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிஹா, ஜெயஶ்ரீ, ஷோபனா நான் என மொத்தம் ஒன்பது பேர் இப்பாசுரத்தைப் பாடியுள்ளோம். நாங்கள் தொலைப்பேசியிலேயே பாடிய பாடல்களை, சுபஶ்ரீ தணிகாசலம் அழகாகத் தொகுத்துள்ளார். பாடல்களுக்கான ஒளிப்பதிவை பகத் மேற்கொண்ட போதும் சிலர் தங்களது தொலைப்பேசியிலேயே காணொளியாகப் பதிவு செய்தனர். ரவி ஜி இசையமைக்க, படத்தொகுப்பு பணிகளைக் கெவின்தாஸ் கவனித்துக்கொண்டார். இந்த வருடம் மட்டுமின்றி அடுத்த வருடமும் இது போல ஒரு பாசுரத்துடன் உங்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

Advertisment

நடிகர் கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரும் இப்பாசுரத்தைநாளை (08.01.2021) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe