இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மாறன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளனர். தப்பான அரசியல்வாதிகளின்முகத்திரையைகிழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர்பலரின் கவனத்தை பெற்று வருகிறது.அத்துடன் பாடம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.