இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலும், அப்பாடலுக்கு தனுஷ் ஆடிய நடனமும் சமூக வலைதளங்களில்வைரலான நிலையில் தற்போது அடுத்த பாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில், அனுராக் குல்கார்னி பாடியுள்ளஇப்பாடல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இது வரைவெளியான அண்ணன் தங்கைசென்டிமென்ட்பாடல்கள்அனைத்தும்ஹிட்டடித்த நிலையில் தற்போது அந்த லிஸ்டில் இப்பாடலும் இணையும் என கூறப்படுகிறது.