Advertisment

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் படம்!

dhanush

Advertisment

கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாறன்’. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, மகேந்திரன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷும் மாளவிகா மோகனனும் ஊடகவியலாளராக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று (30.09.2021) தொடங்கியுள்ளது. இத்தகவலை இயக்குநர் கார்த்திக் நரேன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

actor dhanush karthick naren
இதையும் படியுங்கள்
Subscribe