Advertisment

அடுத்தடுத்து ஷூட்டிங்கிற்கு தயாராகும் சிம்பு... மாநாடு அப்டேட்!

suresh kamatchi

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்து வந்தார். கரோனாவால் படத்தின் ஷூட்டிங் முடங்கியிருந்தது. இந்த படத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதால் கரோனா அச்சுறுத்தல் முழுவதும் முடிந்தபிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனிடையே 'மாநாடு' ஷூட்டிங் தொடங்குவதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சிம்பு நடிக்க திட்டமிட்டு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி முதல் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் சிம்பு 35 நாட்களுக்குள் இந்த படத்தை முடித்து கொடுக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மாநாடு படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

suresh kamatchi
இதையும் படியுங்கள்
Subscribe