vafaf

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

alt="vdavad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6228c78d-6d14-4eae-9c6e-04187ca3e2a1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_30.png" />

அதில், ஒரு புகைப்படத்தில் சிம்பு மண் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நின்று பேசிக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு, கூடவே "நடிகர்களின் வாழ்க்கை. எளிய மனிதர்" என குறிப்பிட்டுள்ளார். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

Advertisment