Advertisment

அப்பாடா...! தொடங்கியது மாநாடு படப்பிடிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி 

வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஒரு வருடமாக நடைபெறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அதன்பின் படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

Advertisment

cda

இதையடுத்து மீண்டும் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பின் மீண்டும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் பூஜையோடு இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் படக்குழு, பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் இன்ப அதிர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

zcS

maanaadu maanadu Simbu venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe