சமீபத்தில் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படம் கைவிடப்பட்டதாக தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மாநாடு படத்தின் தயரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Advertisment
Advertisment

‘செக்கச் சிவந்த ராஜா’ படத்திற்கு பின் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதன் வருவேன்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என இரு படங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. முதலில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்து வெளியான பின், மாநாடு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

தற்போது வந்தா ராஜாவாதன் வருவேன் படம் வெளியாகியும் இன்றும் மாநாடு படம் குறித்து எந்த தகவலும் வராததை அடுத்து, இப்படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மாநாடு ஃபர்ஸ்ட் லுக் வெளியான பின்பு, சிம்புவின் பிறந்தநாள் அன்று பூஜை போடப்படும் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர், “படம் கைவிடப்பட்டதாக வதந்திதகளை பரப்ப வேண்டாம். படப்பிடிப்பை தொடங்குவது என்பது சாதாரணமானது அல்ல. மாநாடு படம் திட்டமிட்டபடி எடுக்கப்படும். படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.