maanadu

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் அறிவித்தார். அதில் படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் நடிகர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'எஸ்.டி.ஆர். கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கள் தினத்தன்று மாலை4:05 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது புது அப்டேட் விட்டுள்ளது.