வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.
இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று (27.09.2021) வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி ‘மாநாடு’ படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.
#MaanaaduTrailer#oct 2nd 2021@SilambarasanTR_@vp_offl@sureshkamatchi@thisisysr@iam_SJSuryah@kalyanipriyan@madhankarky@Premgiamaren@ACTOR_UDHAYAA@Anjenakirti@MahatOfficial@manojkumarb_76@Richardmnathan@UmeshJKumar@Cinemainmygenes@silvastunt@johnmediamanagrpic.twitter.com/e3oBkvcSAl
— sureshkamatchi (@sureshkamatchi) September 27, 2021