Maanaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

Advertisment

பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக கடந்த வார சனிக்கிழமை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், ட்ரைலர் வெளியாகி 5 நாட்களைக் கடந்துவிட்டபோதிலும், ட்ரெண்டிங் வரிசையில் 10வது இடத்தில் தொடர்கிறது.

Advertisment

ஒரு கோடி பார்வைகள் என்ற சாதனை மைல்கல்லை ‘மாநாடு’ பட ட்ரைலர் தொட்ட மகிழ்ச்சியை, சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.