Advertisment

‘மாநாடு’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

gfdhsffh

Advertisment

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்துவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த மே 14ஆம்தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘மாநாடு’ சிங்கிள் பாடல் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வி ஹவுஸ் புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

maanaadu Simbu
இதையும் படியுங்கள்
Subscribe