Advertisment

'மாநாடு டைட்டிலில் நடந்த மாற்றம்...' - தயாரிப்பாளர் ட்வீட்!

Maanaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.

Advertisment

‘மாநாடு’ படத்தைத் தீபாவளி தினத்தையொட்டி திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இறுதிக்கட்டப்பணிகளில் வேகங்காட்டிவரும் படக்குழு, படத்தின் ட்ரைலரை நாளை வெளியிடுகிறது. இந்த நிலையில், மாநாடு படத்தின் பிற மொழிகளுக்கான டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "பிற மொழிகளுக்கான புதிய டைட்டில் நாளை ட்ரைலர் வெளியிடும்போது தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

maanaadu actor simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe