/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_21.jpg)
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கே இடையே உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தின் டீசர் வெளியானது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான படத்தின் மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகன் சிம்பு இன்று (03.02.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து உற்சாகமன ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/sRRuOfgz10U.jpg?itok=MVy9Xmpb","video_url":" Video (Responsive, autoplaying)."]}
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)