Skip to main content

பாகுபலி வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்த மாநாடு படக்குழு!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

 maanaadu movie team joined bhagubali Distributors

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.  எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே. சூர்யா, பிரேம் ஜி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை  நிறைவு செய்த படக்குழு  இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  

 

மாநாடு படத்தின் சிறு முன்னோட்டமாக வெளியான ட்ரைலர்  ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25 ஆம் தேதிக்குத் தள்ளிப் போனது.  

 

ad

 

இந்நிலையில் மாநாடு படத்தை கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 150 திரையரங்கில் வெளியிடவுள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தை வெளிநாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ரூ.1 கோடி...' - சிம்புவுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

simbu corona kumar issue

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 

 

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

 


 

Next Story

அரிசிக்கொம்பனை தொடர்ந்து களமிறங்கிய  ‘பாகுபலி’; மக்கள் கவலை

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

'Baahubali' followed by Arisikkomban; People worry

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிசிக்கொம்பன் சில நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது. அரிசிக்கொம்பன் யானை ஒரு வழியாகப் பிடிபட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை தேனி மீது குவிக்க வைத்த அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்ட உடன் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்ற யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாழ்படுத்தி வருவதால் அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தால் வனப் பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்ற யானை ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் பாகுபலி யானை பலமுறை ஊருக்குள் புகுந்துள்ளது. நெல்லிமலை மற்றும் கள்ளார் வனப்பகுதிகளில் பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படும்.

 

இரு காடுகளுக்கும் இடையே யானை குடிபெயரும் போது ஊருக்குள் செல்வது வழக்கம். ஆனால் தற்போது வறட்சி காணப்படுவதால் உணவு தேடி விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே பாகுபலி யானை அதிக அளவு விவசாய நிலங்களுக்குள் சுற்றி வருகிறது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விட முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொடர் முயற்சியின் காரணமாக வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இன்று அதிகாலை யானையானது குடியிருப்புகள் வழியாக கள்ளார் வனப்பகுதிக்குச் சென்றுள்ளது. இதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.