Advertisment

சிங்கிள் டேக்கில் நடித்த சிம்பு... இணையத்தில் ட்ரெண்டாகும் 'மாநாடு' மேக்கிங் வீடியோ!

maanaadu movie single shot video released

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் மேக்கிங் வீடியோவைரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சியில் நடிகர் சிம்பு 5 நிமிடம் தொடர்ச்சியாக ஒரே டேக்கில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisment

‘மாநாடு’ திரைப்படம்சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

actor simbu maanaadu maanadu Simbu venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe