மாநாடு படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்

maanaadu movie new update out now

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே சூர்யா பிரேம் ஜி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

மாநாடு படத்தின் சிறு முன்னோட்டமாக வெளியான ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25 ஆம்தேதிக்கு தள்ளிப் போனது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் குறித்தஅப்டேட்டைதனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில்," மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத்தயாராக உள்ளோம், விரைவில் தேதி அறிவிக்கப்படும், காத்திருங்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.

actor simbu maanaadu silambarasan suresh kamatchi
இதையும் படியுங்கள்
Subscribe