Advertisment

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!

Advertisment

simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.

Advertisment

தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவரும் படக்குழு, படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இத்தகவலை, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Simbu
இதையும் படியுங்கள்
Subscribe