simbu

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.

Advertisment

இப்படத்தின் முதல் பாடல் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், முதல் பாடலுக்கான டீசர் இன்று (19.06.2021) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. கடந்த மே 14ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று இப்பாடல் வெளியாகுமென ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், கரோனா இரண்டாம் அலை காரணமாக ரிலீஸ் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், இந்தமுறை இப்பாடலை மிகுந்த ஆர்வத்துடன் சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisment