/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/104_6.jpg)
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.
இந்த நிலையில், சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள படக்குழு, படத்தில் இடம்பெற்றுள்ள இரவு நேரக் காட்சிகளை படமாக்கி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் சிம்புவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#maanaadupic.twitter.com/9JaiGjw7GU
— sureshkamatchi (@sureshkamatchi) March 30, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)