maanaadu editor kl praveen joins pathu thala movie

Advertisment

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும்,'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும்'பத்து தல' படத்தில் கௌதம்கார்த்திக்குடன்இணைந்துநடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'பத்து தல' படத்திற்குஎடிட்டர் பிரவீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மாநாடு' படத்தில் எடிட்டராகப் பணியாற்றிருந்தார். இப்படத்தில் இவரின் பணி பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.