‘அற்புதமான ஸ்கிரிப்ட்’- சிம்பு படத்தை புகழ்ந்த கல்யாணி

சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்திலிருந்து ஒரு அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

kalya

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனை அடுத்து சிம்புவை வைத்து வெங்கட் பிரபு ‘மாநாடு’ என்கிற அரசியல் படத்தை இயக்க உள்ளார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியால் அறிவிக்கப்பட்டது. பிரவீன்.கே.எல் இந்த படத்தை எடிட் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஃபிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளான அன்று மாநாடு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அது மட்டுமில்லாமல் இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மேலும் வேறு யார் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் படம் ட்ராப்பாகிவிட்டது என்றும் செய்தி வந்தது. அதை மறுத்து சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்தார்.

இந்நிலையில், சுரேஷ் காமாட்சி இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனையடுத்து ட்வீட் செய்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், “ஒரு அற்புதமான ஸ்கிரிப்டை நிஜத்தில் கொண்டுவர ஆர்வமாக இருக்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஹீரோ படத்திலும் ஹீரோயினாக கல்யாணி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kalyani priyadharsan maanaadu Simbu suresh kamatchi
இதையும் படியுங்கள்
Subscribe