maamannan trailer update

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன.

Advertisment

இசை வெளியீட்டு விழா கடந்த 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசையோடு சேர்த்து டிரைலரும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில் டிரைலர் வெளியாகவில்லை. மேலும் வருகிற 29 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக உதயநிதி தெரிவித்திருந்தார். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 16 ஆம் தேதி (நாளை)டிரைலர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்து ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. இதனால் டிரைலருக்கு ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதியும் அதில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.