'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.சேலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு இதனைகேக் வெட்டி கொண்டாடியுள்ளது. விரைவில் படத்தின் பாடல் மற்றும் டீசர் குறித்தஅறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.