Advertisment

'மாமன்னன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Advertisment

maamannan ott released update

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="320b7396-3534-4fb0-bf5d-8c4265f02947" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_4.jpg" />

இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில் படத்தை பார்த்து ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதிநெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்து போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.

actor Vadivelu maamannan mari selvaraj Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe