maamannan next single update

Advertisment

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" எனப் பேசினார்.

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான'ராசா கண்ணு' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஜூன் மாதம்வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும்அதில் கமல் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 27ஆம்தேதி (27.05.2023) அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். முதல் பாடல் நல்ல வரவேற்பைப்பெற்றநிலையில் அடுத்த பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.