Advertisment

உதயநிதியின் 'மாமன்னன்' - ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

maamannan first single update

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" என பேசினார்.

Advertisment

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. மேலும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 8ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானுடன் வடிவேலு மற்றும் படக்குழு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு ஒரு பாட்டு பாடியுள்ளதாக தெரிவித்தன. பின்பு இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலு பாடிய அந்த பாடலை முதல் பாடலாக வருகிற 19ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இளையராஜா, தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். இதில் பல பாடல்கள் ஹிட்டும் அடித்துள்ளன. அந்த வகையில் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு படியுள்ளதால் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

mari selvaraj actor Vadivelu ar rahman Udhayanidhi Stalin maamannan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe