'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படத்தைத்தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" என பேசினார்.
உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகுவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மே 1ஆம் தேதி (01.05.2023) வெளியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இதனை ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அண்மையில் ஒரு பேட்டியில், ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என மாரி செல்வராஜ் கூறினார். அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரிலீஸ் தேதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#MAAMANNAN@mari_selvaraj@arrahman#Vadivelu@KeerthyOfficial#FahadhFaasil@thenieswar@editorselva@dhilipaction@kabilanchelliah@kalaignartv_off@MShenbagamoort3@teamaimprpic.twitter.com/cig6VVunQK
— Udhay (@Udhaystalin) April 29, 2023