Advertisment

'மாமனிதன்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி 

Advertisment

maamanithan movie update out now

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்புதரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c3d61ac1-8311-44d3-8aaf-ae3d9e847831" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_5.jpg" />

இதையடுத்து, படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதால் விரைவில் 'மாமனிதன்' படம் வெளியாகும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்திருந்தார். சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,இயக்குநர் சீனுராமசாமி‘மாமனிதன்’ படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “37 நாட்களில் உருவான 'மாமனிதன்'திரைப்படம்.எடிட்டர் ஸ்ரீகாந்த் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரைத்தொட காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது மாமனிதன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vijay sethupathi maamanidhan seenu ramasamy Vijay Sethupathi mamanidhan
இதையும் படியுங்கள்
Subscribe