Advertisment

'மாமனிதன்' - தொடர் சர்வதேச விருதுகளைப் பெறும் சீனு ராமசாமி

maamanithan awarded at 56 th Worldfest Houston International film festival

Advertisment

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது.

சமீபத்தில் கூட ரஷ்யாவில் நடந்த மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில்மாமனிதன் படம் திரையிடப்பட்டது. இதற்காக ரஷ்யா சென்று அந்த நிகழ்ச்சியில் சீனு ராமசாமி கலந்து கொண்டார். அந்த வகையில் 56வது வேர்ல்ட் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் (Worldfest Houston International film festival) தேர்வாகியிருந்தது.

இந்த நிலையில் ஸ்பெஷல் ஜூரி ரெமி விருது என்ற பிரிவின் கீழ் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பப் படத்திற்காக சீனு ராமசாமிக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற சீனு ராமசாமிக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

maamanithan seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe