Advertisment

சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கம்

Maajja Company Explains Santhosh Narayanan's Allegation regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகப்படுத்தியமாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்களைக்கடந்துள்ளது.

Advertisment

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும்சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

Advertisment

இந்த சூழலில், கடந்த 5 ஆம் தேதி சந்தோஷ் நாராயணன் இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது” எனப் பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியது.

இதையடுத்து மற்றொரு பதிவில், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர். ரஹ்மான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் நாராயனன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நோயல் கீர்த்திராஜ்வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை மறுத்து மாஜா நிறுவனத்தின் பதில் அறிக்கை. சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீடான என்ஜாய் என்ஜாமியின் வெற்றி எமக்கும்இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையடுத்து, இந்த சாதனையைப் படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புகளில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்தி வைக்கும் செயல்களை செய்யவில்லை. இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அது தவிர, கலைஞர்களின் ஒப்பந்த கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் முயற்சிகள் சிக்கல் நிலையிலுள்ளது.

இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும்விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டுஉரிய வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

enjoy enjaami santhosh narayanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe