Advertisment

“கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!” - பாடலாசிரியர் விவேகா  

Lyricist Viveka said he was mesmerized by the movie Kanguva

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும், இப்படத்தை முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில்வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கங்குவா படத்தின் பாடலாசிரியரான விவேகா, இப்படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisment

இது குறித்து முன்னணி பாடலாசிரியர் விவேகா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமையாக உணர்கிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Kanguva
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe