lyricist snehan complaint against BJP woman executive actress Jayalekshmi

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வளம் வரும் சினேகன் கடந்த 2018-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' அரசியல் கட்சியில் இணைந்தார். அரசியல், சினிமா என இரண்டிலும் பயணித்து வரும் சினேகன் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒரு அறக்கட்டளையைத்தொடங்கி அதை வழிநடத்தியும் வருகிறார். இந்நிலையில் தனது அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்துள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="470c34db-9e93-4b59-b116-f10393c22324" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_30.jpg" />

Advertisment

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சினேகன், "சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாகவும் என் நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். பின்பு அடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து என்னிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை 2 முறை சட்டப்படி விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பின்பு அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணைதொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தன்னை பொதுவெளியில் சந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.

மேலும் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோம். ஆனால் அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்தது. சமூக வலைதளத்தில் அந்தப் போலி கணக்கை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், அவர் வழக்கறிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த ப்பணமோசடி குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளேன்" எனப் பேசினார். சினேகனால்குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஜெயலட்சுமி பா.ஜ.க நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.