/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_58.jpg)
நடிகர்பிரபுதேவா, ‘பொன்மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக 'குலேபகாவலி' பட இயக்குநர் கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் தொடங்கிய நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளையும் பிரபுதேவா தொடங்கியுள்ளார். இப்படத்தைப் பிரபல பாடலாசிரியர் பா. விஜய் இயக்கவுள்ளார். 'ஸ்ட்ராபெர்ரி', 'ஆருத்ரா' ஆகிய படங்களைத் தொடர்ந்து இது பா. விஜய் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமாகும்.
இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் கலையரசன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)