Advertisment

பிரபல பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார்!

lyricist kamakodiyan passed away

பிரபல பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன்(76) காலமானார். தமிழ் சினிமாவில் 1000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் 'வாழ்க்கை சக்கரம்', 'தொடரும்', 'மௌனம் பேசியதே', 'மதுமதி', 'திருட்டு ரயில்' உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, தேவா,எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன்கவிஞர் காமகோடியன் பணியாற்றியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' படத்தில் இவர் எழுதிய "என் அன்பே என் அன்பே..." பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

Advertisment

இந்நிலையில் கவிஞர் காமகோடியன் வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (5.1.2022)உயிரிழந்தார். இவரின்மறைவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

actor surya lyricist kamakodiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe