Advertisment

‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் பாடலாசிரியர் மரணம்!

Anil Panachooran

Advertisment

பிரபல மலையாள பாடலாசிரியரான அனில் பனசூரன்,2005-ஆம் ஆண்டில் வெளிவந்த 'மகள்க்கு' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார். இவர், கடந்த 2017-ஆம் ஆண்டில் வெளியாகிஇந்தியா முழுவதும் வைரலான 'ஜிமிக்கி கம்மல்' என்ற பாடலின் பாடலாசிரியர் ஆவார். மேலும், மலையாள இலக்கிய உலகில் முக்கிய கவிஞராகவும் அறியப்பட்டு வந்தார்.திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அனில் பனசூரன். அங்கு அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (03.01.2021)இரவு மரணமடைந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe