style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'மிஸ்டர் சந்திரமவுலி' படத்திற்கு பிறகு பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கோ. தனஞ்ஜெயன், S. விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் படம் 'காற்றின் மொழி'. ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெற்றிபெற்ற 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு 'காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை' அறிவித்துள்ளனர். பாடல் எழுத தெரிந்தவர்கள், சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 24.09.18 ஆகும். போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மேலே போடப்பட்ட படத்தில் உள்ள விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்குபெறலாம். மேலும் வரிகள் எழுதிய பாடலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
பாடலுக்கான டியூனுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/KAYdProfTrc.jpg?itok=VXkMy03d","video_url":" Video (Responsive, autoplaying)."]}