/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ilitin.jpg)
பியானோ சாதனையாளரான லிடியன் நாதஸ்வரம் தனது இசை திறமையால்உலகம் முழுவதும் பிரபலமானவர். 14 இசைக்கருவிகளை வசிக்கக்கூடிய திறமை படைத்த அவர், தற்போது மலையாளத்தில் மோகன்லால்நடிக்கும் 'பரோஸ்'என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் இசையும் கற்று வருகிறார்.
இந்நிலையில் இளையராஜா குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள லிடியன் நாதஸ்வரம்,"என்னுடைய இசை ஆசிரியர் இளையராஜா என்னிடம், ‘நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன்’ என்றார். தினமும் எனக்கு அன்புடனும் அரவணைப்புடனும் இசையைப் பயிற்றுவிக்கிறார். உங்களுடைய வாழ்த்தும் ஆசிர்வாதமும் வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலையராஜாவிடம்பயிற்சி பெரும்புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)