lyca tamil kumaran

Advertisment

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான சீதா ராமம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படக்குழுவினர் சென்னையில் வெற்றிவிழா கொண்டாடினர்.

விழாவில் லைகா தமிழ்க்குமரன் பேசுகையில், '' சீதா ராமம் படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த படக்குழுவினருக்கு லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை வெளியிட்டது பெருமையாக உள்ளது. நாங்கள் தயாரிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் பிற தயாரிப்பாளர்கள் தயாரித்த 'புஷ்பா', 'ஆர். ஆர். ஆர்', 'டான்' என அடுத்தடுத்து படங்களை வெளியிட்டோம். அந்த வரிசையில் தற்போது 'சீதா ராமம்' படத்தை வெளியிட்டோம். இந்தப் படத்தை மைல் கல்லாகவே கருதுகிறோம். 'சீதா ராமம்' படத்தின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர்விட்டதாக தெரிவித்தனர். எதிர்பாராத பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் 'சீதா ராமம்' படக்குழுவுடன் லைகா இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது'' எனக் கூறினார்.