மலையாளத்தில் களமிறங்கும் லைகா!

Lyca to make films in Malayalam

இந்தியாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் படத்தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கி வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில்,மலையாளத்திரையுலகில் இதுவரை மேற்கொள்ளப்படாத பிரம்மாண்டமான பொருட்செலவில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் மூலம் மலையாளத்திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புடன் லைகா நிறுவனம் களமிறங்குகிறது.

இந்நிறுவனம் தற்போது இயக்குநர் ஷங்கர் - 'உலக நாயகன்' கமல்ஹாசன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'இந்தியன் 2' படத்தைத்தயாரித்து வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்'திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் 'தலைவர் 170' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

அதுமட்டுமின்றி இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. மேலும் தளபதி விஜய்யின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தையும் தயாரிக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகரான அக்‌ஷய்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

தொடர்ந்து பிரம்மாண்டமான படைப்புகளைத்தயாரித்து வழங்கி இந்தியசினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தற்போது மலையாளத்தில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜி.கே.எம். தமிழ் குமரன் இந்த படைப்புகளைத்தொடர்ந்து, வேறு சில முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் அடுத்தடுத்த பிரம்மாண்டமான படைப்புகள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.

lyca
இதையும் படியுங்கள்
Subscribe