Advertisment

ஷங்கர் மீதான புதிய வழக்கையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

hrhdrhdrh

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கிவருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரும் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த நிலையில், ‘இந்தியன் 2’ விவகாரம் தொடர்பாக லைகா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில், தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கத் தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்தது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி தனது முடிவை அறிக்கையாக தாக்கல் செய்ததார். இதையடுத்து 'இந்தியன் 2' பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இந்தப் புதிய வழக்கு இன்று (08.07.2021) மீண்டும் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

director Shankar indian 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe