Advertisment

“டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன்” - அனுபவம் பகிர்ந்த ‘லஸ்ட் ஸ்டோரி 2’ நடிகை

lust stories actress Neena Gupta about his first kiss in on screen

தமன்னா, மிருணாள் தாக்கூர், கஜோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2'. இதில் மிருணாள் தாக்கூர் கதையில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மூத்த நடிகை நீனா குப்தா. ஆர்.பால்கி, கொங்கோனா சென் சர்மா உள்ளிட்ட நான்கு பேர் இயக்கியுள்ள இத்தொடர் வருகிற 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக உள்ளது. அந்த வகையில் ஒரு நேர்காணலில், நடிகை நீனா குப்தா தனது முதல் முத்தக் காட்சியில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "பல வருடங்களுக்கு முன்புதிலீப் தவானுடன் ஒரு சீரியலில் நடித்தேன். அதில் ஒரு முத்தக் காட்சி இருந்தது. அதுதான் இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலாக லிப்லாக் காட்சியாக இருந்தது.

Advertisment

என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. நாங்கள் தெரிந்தவர்கள். அவர் நல்ல தோற்றமுடையவர் தான். ஆனால் அந்த சூழ்நிலையில் அது முக்கியமில்லை. ஏனென்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் தயாராக இல்லை. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்.ஆனால் நான் அதை கடந்து செல்ல என்னை சமாதானப்படுத்தினேன். சிலரால் நகைச்சுவை செய்ய முடியாது, சிலரால் கேமரா முன் அழ முடியாது. அதை என் தலையில் ஏற்றிக்கொண்டு அந்த காட்சியில் நடித்து முடித்தேன். பின்பு டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன். எனக்குத் தெரியாத ஒருவரை முத்தமிடுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்றார்.

Bollywood Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe