/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/269_10.jpg)
மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் 'காட்ஃபாதர்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ரீமேக் செய்து வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகக் கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்க முரளி கோபி கதை எழுதுகிறார். 'எம்புரான்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ப்ரித்விராஜ் இயக்குகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருடன் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக மலையாளத் திரையுலகில் காலடி வைக்கிறார் தயாரிப்பார் சுபாஸ்கரன். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)