lubber pandhu ott release update

Advertisment

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான படம் ‘லப்பர் பந்து’. லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்க தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் இப்படத்தை பார்த்து பாராட்டினர். மேலும் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், கார்த்தி, ராஜு முருகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர். இதையடுத்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி, விஜயகாந்த் குடும்பத்தினர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பாராட்டினர்.

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 31ஆம் தேதி இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.