Advertisment

மாட்டிறைச்சி கடைக்கு வந்த பாராட்டு - அனுபவம் பகிரும் ‘லப்பர் பந்து’ கலை இயக்குநர் 

Lubber Pandhu art director Veeramani Ganesan interview

Advertisment

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். படத்தின் வெற்றிக்கு இசை, நடிப்பு ஆகியவை ஒருபுறம் கைகொடுக்க மறுபுறம் படத்தின் கதைகளத்திற்காக உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானங்கள், கதாபாத்திரங்கள் வாழும் வீடுகள் ஆகியவை கைகொடுத்தது.

இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியவர் வீரமணி கணேசன். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷுடன் இணைந்து சில காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் வீரமணி கணேசனை நமது நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்து பேசினோம். அப்போது இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும் அதற்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில், “இப்படத்தில் வரும் கிரிக்கெட் மைதானங்கள், வீடுகள் போன்றவற்றை அந்தந்த காலத்திற்கேற்ப செய்திருந்தோம். குறிப்பாக கெத்து கதாபாத்திரத்தின் மனைவியாக வரும் யசோதையின் மாட்டிறைச்சி கடையை ரியலாக இருப்பதாக கூறி பலரும் பாராட்டினர். நான் மதுரையில் பிறந்து வளர்ந்ததால், சின்ன வயதிலிருந்தே அடிக்கடி அருகில் இருக்கும் சில மாட்டிறைச்சி கடைகளை பார்த்துள்ளேன். அந்த இடங்களுக்கு சென்று அந்த கடைகளை பார்த்ததால் தத்ரூபமாக அதை என்னால் வடிவமைக்க முடிந்தது. நிறைய நண்பர்கள் இப்படத்தை பார்த்து கால் செய்து பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதாக தங்களது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்தனர்” என்றார்.

Advertisment

Nakkheeran Studio
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe