லயோலா கல்லூரியில் நடைபெற்ற புதிய பட்டயப் படிப்பு துவக்க விழா!

loyola college function

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து, விஸ்காம் பிரிவியூ தியேட்டரில் "டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்" என்ற பிரீமியம் படிப்பை தொடங்குவதாகப் அறிவிக்கப்பட்டது.

இந்த தனித்துவமான பாடத்திட்டம் கலர் கார்பென்டர் எனும் நிறுவனத்தின் இயக்குனர்கள் லயோலா விஸ்காம் முன்னாள் மாணவர்களான மாதவி இளங்கோவன் மற்றும் ஜான் விஜய் ஜெபராஜ் ஆகிய இருவரால் வழிநடத்தப்படவிருக்கிறது. படைப்புத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இவர்கள் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், பிரான்ஸ், பாரிஸில் உள்ள டான் பாஸ்கோ இன்டர்நேஷனல் மீடியா அகாடமியுடன் இணைந்து, பாரம்பரியம் மிக்க விஸ்காம் துறைக்காக இந்த பாடத்திட்டத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

Nassar
இதையும் படியுங்கள்
Subscribe